இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

விலையில்லா மிதிவண்டி வழங்கும் மற்றும் சாதனை மாணவர்களைப் பாராட்டும் விழா



விலையில்லா மிதிவண்டி வழங்கும் மற்றும் சாதனை மாணவர்களைப் பாராட்டும் விழா


                இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியில் 11/8/2015 செவ்வாய்க் கிழமை அன்று தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி மற்றும் பொதுத் தேர்வுகளில் சாதனை புரிந்த மாணவர்களைப் பாராட்டிப் பரிசுகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. 

             இந்த விழாவில் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. எஸ்.பழனிச்சாமி அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.  காலை பதினொரு மணியளவில் தொடங்கிய இந்த விழாவிற்குப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.அ.வடிவேல் அவர்கள் தலைமை தாங்கி வரவேற்புரை ஆற்றினார்.  இலந்தக்கோட்டை ஊராட்சிமன்ற உறுப்பினர் திரு.ஆ. மோகன் அவர்கள் முன்னிலை வகித்தார். 

            இந்த விழாவில் இக்கல்வியாண்டில் பதினோராம் வகுப்புப் பயிலும் முப்பத்தாறு மாணவர்களுக்குத் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.  மேலும் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் டூ பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்கள் கலாவதி, ரோஜா, ராஜலட்சுமி மற்றும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்கள் கீர்த்தனா, கோகுல், கவிதா ஆகியோருக்கு வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு எஸ். பழனிச் சாமி அவர்களின் தமது சொந்த நிதியில் இருந்து பரிசுத் தொகையுடன் பாராட்டுக் கேடயங்களும் வழங்கப்பட்டன.  
           
              மேலும் இந்த விழாவில் குஜிலியம்பாறை ஒன்றியப் பெருந்தலைவர் திருமதி.நாகம்மாள், பாளையம் பேரூராட்சித் தலைவர் திரு. பெருமாள், இலந்தக்கோட்டை ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் திரு. பெருமாள், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு.வெங்கட்ராமன், பொருளாளர் திரு. இராமமூர்த்தி, கிராம கல்விக் குழுத் தலைவர் திரு. திருவேங்கடம், பள்ளியின் கட்டடக் குழுத் தலைவர் திரு நம்பெருமாள், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் துணைத் தலைவர் திரு சுதந்திரமணி மற்றும் ஊர்ப்பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். 

              பள்ளியின் தமிழாசிரியர் திரு கோபிநாத் அவர்கள் விழாத் தொகுப்புரை ஆற்றினார். பள்ளியின் முதுகலைத் தமிழாசிரியர் திருமதி.பாரதமணி அவர்கள் நன்றியுரை ஆற்றினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக