இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

சுதந்திரதின விழா நிகழ்வுகள் - 2015



சுதந்திரதின விழா நிகழ்வுகள் – 2015

          இந்தியாவின் 69 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.  காலை ஒன்பது மணியளவில் இலந்தக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் திரு. ஆ.மோகன் அவர்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.

        உறுதிமொழி, சர்வசமய வழிபாட்டைத் தொடர்ந்து விழாக் கொண்டாட்டம் தொடங்கியது.  இந்த விழாவிற்குப் பள்ளியின் புதிய தலைமை ஆசிரியர் திரு. பா. பாண்டியன் எம்.எஸ்சி.,எம்.எட்.,எம்.பில்.,  அவர்கள் தலைமை தாங்கிச் சுதந்திர தினப் பேருரை ஆற்றினார். இலந்தக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் அவர்கள் மாணவர்கள்  இந்தக் கல்வியாண்டில் மாவட்ட மாநிலச் சாதனைகள் செய்ய உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று ஊக்கமூட்டினார்.  முன்னதாகப் பள்ளியின் மூத்த முதுகலை ஆசிரியர் திரு.வெ. பாலகிருஷ்ணன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

        இந்த விழாவில் வேடசந்தூர்ப் பகுதி மாதினிப் பட்டியைச் சேர்ந்த திரு. தனஞ்செயன் என்பாரது அய்யாதுரை பாண்டியன் நினைவு அறக்கட்டளை சார்பாக கடந்த அரசு பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்குக் கேடயங்களும் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டன.

       அடுத்து அதே போல மாணவர் சாதனையாளர்களுக்கு அபிநயா நினைவு அறக்கட்டளை சார்பாகவும், பள்ளியின் முன்னாள் மாணவர் அமைப்பினரின் இளைய பாரதம் அறக்கட்டளை சார்பிலும் பரிசுத் தொகை வழங்கப்பட்டன.

       பிளஸ் டூ பொதுத் தேர்வு தமிழ்ப் பாடத்தில் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி தி.கலாவதிக்கும், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு தமிழ்ப் பாடத்தில் பள்ளி அளவில்  முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கீர்த்தனா, சுதர்சனன் ஆகியோருக்கு இலந்தக்கோட்டை பகுதியில் உள்ள தமிழிசை நண்பர்கள் குழு சார்பாகப் பரிசுகள் வழங்கப்பட்டன. 

      SBCC நண்பர்கள் குழு சார்பாகப் பள்ளிக்கு ஒரு மின் குழல் விளக்கு வழங்கப்பட்டது.

      இந்த விழாவில் பள்ளியின் கிராம கல்விக் குழுத் தலைவர் திரு. திருவேங்கடம், பெற்றோர் ஆசிரியர் கழகப் பொருளர் திரு. இராமமூர்த்தி, கட்டடக் குழுத் தலைவர் திரு. நம்பெருமாள், அய்யா துரை பாண்டியன் அறக்கட்டளை சார்பாக திரு. சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர். விழாவில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

      மாணவர்களின் உரைவீச்சு, ஆடல், பாடல், கவியரங்கம், கோலாட்டம் முதலான கலைநிகழ்ச்சிகள் கண்களுக்கும் செவிகளுக்கும் விருந்தாயின.

      பள்ளியின் இளநிலை உதவியாளர் திரு.கோவிந்தசாமி அவர்கள் “காக்க வேண்டும் சுதந்திரம்” எனும் தலைப்பில் கவிதை வாசித்தார்.

பள்ளியின் தமிழாசிரியர் திரு. கொ.சுப.கோபிநாத் அவர்கள் விழாத் தொகுப்புரை ஆற்றினார். பள்ளியின் கணினி பயிற்றுநர் திருமதி.இல.கோகிலா அவர்கள் நன்றியுரை ஆற்றினார். நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக